Pugazhendi meeting with Karnataka State Home Minister

கர்நாடக மாநில உள்துறை அமைச்சரும், முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வரரின் பிறந்த நாள் விழாவில் அண்ணா திமுக ஒருங்கிணைப்புக்குழுவைச் சார்ந்த புகழேந்தி கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பரமேஸ்வரருக்கு தந்தை பெரியாரின் சிலையை பரிசாக வழங்கிய புகழேந்தி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி எழுதிய ‘தாட்ஸ் ஆப் பெரியார்’ என்கிற புத்தகத்தையும் வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, அண்ணா திமுக மாநில செயலாளர் குமார், நிர்வாகிகள் ரவி, மோகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். தந்தை பெரியார் சிலையையும், புத்தகத்தையும் பெற்றுக் கொண்ட உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் புகழேந்திக்கு நன்றி தெரிவித்தார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர், பெரியாரின் புகழை எப்போது பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.