Advertisment

ஜெ மரணம் விசாரணை க்கு ஓபிஎஸ்-ஐ அழைக்காவிட்டால்  நீதிமன்றத்தை நாடுவோம்!  புகழேந்தி பகீர் பேட்டி!!

திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாவின் 110 பிறந்த நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

Advertisment

ammk

இக்கூட்டத்திற்கு கர்நாடக மாநில அம்மா மக்கள்முன்னேற்ற கழக மாநில செயலார் புகழேந்தி மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் ஆகியோர் வந்தனர். இக்கூட்டம் நடப்பதற்கு முன்பு திண்டுக்கல் மாநகர செயலாளர் ராமுத்தேவர் வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை விசாரணைக்கு அழைக்க பயப்படுகிறது.அவர்தான் அம்மா மரணத்தில் மர்மம் உள்ளது என்றார். அப்படி இருக்கும்போது

Advertisment

ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைக்க வேண்டும். அப்படி ஓபிஎஸ்ஸை அழைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போகிறோம்.

நாட்டின் பிரதமர், துணை ஜனாதிபதி, எய்ம்ஸ் மருத்துவர்கள், தம்பிதுரை, விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயளாலர் டாக்டர் ராதாகிருஷ்னன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் லண்டன் டாக்டர்கள் ஆகியோரையும் அழைத்து விசாரணை செய்ய வேண்டும். உலகிலேயே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியது இதுதான் முதல் முறை என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து தங்க தமிழ்செல்வன்பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,இலங்கை படுகொலை பிரச்சனையில் அதிமுக அரசு நாடகமாடுகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லியில் வாஜ்பாயை சந்தித்து பேசும் போது வாஜ்பாய் சர்க்கார் ஆயுதம் கொடுத்ததால்தான் எங்களால் இலங்கை தமிழர்களோடு போராடி வெற்றி பெறமுடிந்தது. மைனார்ட்டி அதிமுக அரசு காங்கிரஸையும், திமுகாவையும் எதிர்க்கிறது. ஆனால் பாஜக அரசை ஏன் எதிர்க்கவில்லை. இந்த செயல் 7 கோடி தமிழ் மக்களை திசை திருப்பும் செயலாகும்.

அம்மாவின் மரணம் இயற்கையானது என்பதால்தான் பா.ஐ.க. அரசின் ஆதரவும், ஆளுங்கட்சியாகவும் இருந்தும் இந்த அரசு 3 மாதங்களில் முடிக்கவேண்டிய விசாரணை கமிஷனை ஒரு வருடத்திற்கு இழுத்து வருகிறது. எச் ராஜா மேல் போலீஸ் வழக்கு போட்டும் கூட போலீசார் பாதுகாப்புடன் தானே பேசி வருகிறார் இந்த அரசு என்ன செய்கிறது மக்கள் உங்களை கேவலமாக நினைக்க மாட்டார்களா? அதுனாலதான் ஆட்சியை மக்கள் தூக்கி எரிய கூடிய காலம் வெகுவிரவில் வர இருக்கிறது என்று சொல்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த இடைத்தேர்தலில் தெரிந்து விடும்.

இந்த 1 1/2வருட ஆட்சியில் வேலுமணி.விஜயபாஸ்கர், ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது வழக்கு இருக்கு அப்படி இருக்கும் போது நீங்க ஆட்சி செய்ய தகுதியே கிடையாது. அதனால்தான் ஆட்சியையும், கட்சியையும் நாங்க நடத்துகிறோம் என்று சொல்கிறோம். ஆளும் கட்சியில் உங்களுக்கு எல்லா செல்வாக்கும், பணபலமும் இருக்கு. முடிந்தால் திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுங்கள் பார்ப்போம். எங்க துணை பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி எப்பவுமே அம்மாவுக்கு துரோகம் பண்ணியது கிடையாது. அப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்.

அதன் பின் மாநகராட்சி அருகே போடப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்திற்கு புகழேந்தி, தங்கதமிழ்செல்வன், மாநகர செயலாளர் ராமுத்தேவர் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் திடீரென மேகம் சூழ்ந்து மழை பெய்ய இருந்தது. அதைக்கண்ட தங்கதமிழ்செல்வன் எப்பொழுதும் போல் மைக்கை பிடித்து கொண்டு இந்த ஆட்சி அவலநிலைகளை சுட்டி காட்டியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றி பேசி முடித்து விட்டு அமர்ந்தார். அதைத்தொடந்து கர்நாடக மாநில அம்மா மக்கள்முன்னேற்ற கழக மாநில செயலார் புகழேந்தி பேச ஆரம்பித்தவுடனே திடீரென மழை கொட்ட ஆரம்பித்ததை கண்டு கூட்டத்துக்கு வந்த பொது மக்கள் பதறி அடித்து கொண்டு ஓடினார்கள். அதைக்கண்டு புகழேந்தியும் அடுத்த கூட்டத்தில் பேசுகிறேன் என்று கூறி மேடையில் அமர்ந்து விட்டார். அதன்பின் மழை நின்றவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்.

ammk Pugazhendi Thangatamilselvan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe