Skip to main content

ஜெ மரணம் விசாரணை க்கு ஓபிஎஸ்-ஐ அழைக்காவிட்டால்  நீதிமன்றத்தை நாடுவோம்!  புகழேந்தி பகீர் பேட்டி!!

Published on 26/09/2018 | Edited on 27/09/2018

திண்டுக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாவின் 110 பிறந்த நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

 

ammk


 


இக்கூட்டத்திற்கு கர்நாடக மாநில  அம்மா மக்கள்முன்னேற்ற கழக மாநில செயலார் புகழேந்தி மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் ஆகியோர் வந்தனர்.  இக்கூட்டம் நடப்பதற்கு முன்பு திண்டுக்கல் மாநகர செயலாளர் ராமுத்தேவர் வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம்  துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை விசாரணைக்கு அழைக்க  பயப்படுகிறது.  அவர்தான் அம்மா மரணத்தில் மர்மம் உள்ளது என்றார். அப்படி இருக்கும்போது
ஓ.பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைக்க வேண்டும். அப்படி ஓபிஎஸ்ஸை  அழைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போகிறோம்.


நாட்டின் பிரதமர், துணை ஜனாதிபதி, எய்ம்ஸ் மருத்துவர்கள்,  தம்பிதுரை, விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயளாலர் டாக்டர் ராதாகிருஷ்னன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் லண்டன் டாக்டர்கள் ஆகியோரையும் அழைத்து விசாரணை செய்ய வேண்டும். உலகிலேயே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை எதிர்த்து போராட்டம்  நடத்தியது இதுதான் முதல் முறை  என்று கூறினார்.
 

அதைத்தொடர்ந்து  தங்க தமிழ்செல்வன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இலங்கை படுகொலை பிரச்சனையில் அதிமுக அரசு நாடகமாடுகிறது.  வாஜ்பாய் பிரதமராக இருந்த போது முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கே டெல்லியில்  வாஜ்பாயை சந்தித்து  பேசும் போது வாஜ்பாய் சர்க்கார்  ஆயுதம் கொடுத்ததால்தான் எங்களால் இலங்கை தமிழர்களோடு போராடி வெற்றி பெறமுடிந்தது. மைனார்ட்டி அதிமுக அரசு காங்கிரஸையும், திமுகாவையும் எதிர்க்கிறது. ஆனால் பாஜக அரசை ஏன் எதிர்க்கவில்லை. இந்த செயல் 7 கோடி தமிழ் மக்களை திசை திருப்பும் செயலாகும்.


அம்மாவின் மரணம் இயற்கையானது என்பதால்தான் பா.ஐ.க. அரசின் ஆதரவும், ஆளுங்கட்சியாகவும் இருந்தும் இந்த அரசு 3 மாதங்களில் முடிக்கவேண்டிய விசாரணை கமிஷனை ஒரு வருடத்திற்கு இழுத்து வருகிறது. எச் ராஜா மேல் போலீஸ் வழக்கு போட்டும் கூட போலீசார் பாதுகாப்புடன் தானே பேசி வருகிறார் இந்த  அரசு என்ன செய்கிறது மக்கள் உங்களை கேவலமாக நினைக்க மாட்டார்களா? அதுனாலதான்  ஆட்சியை மக்கள் தூக்கி எரிய கூடிய காலம் வெகுவிரவில் வர இருக்கிறது என்று சொல்கிறோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மக்கள்  இருக்கிறார்கள் என்பதை இந்த இடைத்தேர்தலில் தெரிந்து விடும். 


இந்த  1 1/2வருட ஆட்சியில் வேலுமணி.விஜயபாஸ்கர், ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது வழக்கு  இருக்கு அப்படி இருக்கும் போது நீங்க ஆட்சி செய்ய தகுதியே கிடையாது. அதனால்தான்  ஆட்சியையும், கட்சியையும் நாங்க நடத்துகிறோம் என்று  சொல்கிறோம். ஆளும் கட்சியில் உங்களுக்கு எல்லா செல்வாக்கும், பணபலமும் இருக்கு. முடிந்தால் திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுங்கள் பார்ப்போம். எங்க துணை பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி  எப்பவுமே அம்மாவுக்கு துரோகம் பண்ணியது கிடையாது. அப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்.


அதன் பின் மாநகராட்சி  அருகே போடப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்திற்கு புகழேந்தி, தங்கதமிழ்செல்வன், மாநகர செயலாளர் ராமுத்தேவர் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டனர். ஆனால் திடீரென மேகம் சூழ்ந்து மழை பெய்ய இருந்தது. அதைக்கண்ட தங்கதமிழ்செல்வன் எப்பொழுதும் போல் மைக்கை பிடித்து கொண்டு  இந்த ஆட்சி அவலநிலைகளை சுட்டி காட்டியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றி பேசி முடித்து விட்டு அமர்ந்தார். அதைத்தொடந்து கர்நாடக மாநில அம்மா மக்கள்முன்னேற்ற கழக மாநில செயலார் புகழேந்தி பேச ஆரம்பித்தவுடனே திடீரென மழை கொட்ட ஆரம்பித்ததை கண்டு  கூட்டத்துக்கு வந்த  பொது மக்கள் பதறி அடித்து கொண்டு  ஓடினார்கள். அதைக்கண்டு புகழேந்தியும் அடுத்த  கூட்டத்தில் பேசுகிறேன் என்று கூறி மேடையில் அமர்ந்து விட்டார். அதன்பின் மழை நின்றவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.