
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தநிலையில், நேற்று (18.06.2021) 9 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா என்பது குறைந்திருந்தது. எனவே, தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 27 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டையில் குழந்தையுடன் மதுபானம் வாங்க வந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கைக்காட்டி டாஸ்மாக் கடைக்கு குழந்தையுடன் வந்த சங்கர் என்பவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
ஏனாதி கறம்பை பகுதியைச் சேர்ந்த சங்கர் தனது கைக்குழந்தையுடன் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட ஊர்க்காவல் படையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த வடகாடு போலீசார், சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)