Advertisment

'ஆஃப்லைன் தேர்வுகளை ரத்து செய்' - போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள்!

 Pudukottai students stuggle to 'Cancel Offline Exam'

புதுக்கோட்டையில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கரோனா காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், கடந்த செப். 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. ஒன்றரைமாதம் மட்டுமே நேரடியாக வகுப்புக்கு வந்த நிலையில், ‘நேரில் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில்தான் தேர்வு வைக்க வேண்டும். உடனடியாக வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கும் நேரடி தேர்வுகளை, அதாவது ஆஃப்லைன் தேர்வுகளை ரத்து செய்து ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இது தொடர்பாகக் கல்லூரிக்கு மனுகொடுத்தும் ஏற்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

collector office College students Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe