Advertisment

இளைஞர் உயிரிழப்பு; காவல் நிலைய மரணமாக வழக்குப்பதிவு!

Pudukottai Shanthapuram Seventh St Vigneswaran incident

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டை நகரில் நேற்று முன்தினம் (22.11.2024) இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போதை மாத்திரை பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது என 14 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் 13 பேரைக் காவல் நிலையத்திற்கு வைத்து வரப்பட்டனர். இந்த 13 இளைஞர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை சாந்தபுரம் ஏழாம் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் விக்னேஸ்வரன்.

Advertisment

இவர் காவல் நிலையத்தில் இருந்த போது விக்னேஸ்வரனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் அதே போன்று காவல் நிலையத்தில் இருந்த இருவருக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இதற்கிடையே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில் தான் விக்னேஸ்வரன் குழு வீரர்கள் தான் குற்றம் சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் விக்னேஷ்வரனுக்கு ஏற்கனவே உடல்நலக் குறைவு இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும் காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் விக்னேஸ்வரன்ம் உயிரிழந்ததைக் காவல் நிலையம் மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியத் தண்டனைச் சட்டமான பி.என்.எஸ். (BNS) 196 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த விக்னேஸ்வரன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மரணம் தொடர்பாக குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி விஜயபாரதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

incident police pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe