Advertisment

1000 பேர் மீது வழக்குப்பதிவு!!! 1500 காவல்துறையினர் குவிப்பு... பேருந்து சேவை நிறுத்தம்...

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்திடீரென கலவரம் ஏற்பட்டது.

Advertisment

ponnamaravathi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவியதுதான் இதற்கு காரணமாக இருந்தது. அந்த அவதூறு ஆடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது காவலர்கள் மற்றும் பொன்னமராவதி காவல்நிலையம், காவல்நிலைய வாகனங்கள் ஆகியவை தாக்கப்பட்டன. கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மரங்களை வெட்டி சாலையில் போட்டனர்.இதில் காவலர்கள் உள்ளிட்ட பலர்காயமடைந்தனர்.அதைத்தொடர்ந்து பொன்னமராவதி கலவரத்தில் ஈடுபட்டதாக 1000க்கும் மேற்பட்டோர் மீது 7 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டது என பொன்னமராவதி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இன்று காலை முதலே பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நேற்று நடந்த போராட்டத்தில் கற்கள் வீசி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலுமுள்ள 75 சதவீத நகரப்பேருந்துகளும் இயக்கப்படவில்லை. மேலும் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டுவரவும், பிரச்சனை பெரிதாகாமல் இருக்கவும் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

a ponnamaravathi protest pudukkottai Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe