murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 8 கொலைகள் நடந்திருப்பது மக்களை பதற்றப்பட வைத்துள்ளது. இதில் ஒரு சில சம்பவங்கள் தவிர மற்ற அனைத்து கொலைகளும் திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளதே வேதனை.

Advertisment

அறந்தாங்கி அருகே மகளிடம் காதல் சொல்ல வந்த இளைஞரை தட்டிக் கேட்ட தந்தை தாக்கி கொலை, ஆவுடையார்கோயில் பகுதியில் பா ஜ க பிரமுகர் கொலை, சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் அடித்துக் கொலை, கறம்பக்குடி அருகே காதலனே காதலியை கொன்று நாடகம், விராலிமலையில் பேன்சிஸ்டோரில் மனைவியை கணவரே வெட்டிக் கொன்றார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று விராலிமலை அருகே களமாவூரில் கடன் கொடுத்த விவகாரத்தில் தந்தை மகனை கூலிப்படையை வைத்து வெட்டிக் கொன்றார் அதிமுக பிரமுகர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி அடுத்தடுத்து எட்டு கொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. மேலும் கஜா புயலுக்கு பிறகு 10 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது. எதிர்பாராத திடீர்சம்பவங்களை தடுப்பது சிரமம் என்றாலும் திட்டமிட்ட கொலைகளை தடுக்கவும் முடியாமல் தவிக்கிறது போலீஸ்.