Advertisment

தண்ணீர்பந்தலில் குவளை திருடிய போலிஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்...

கடந்த சில நாட்களுக்கு முன்பு... தண்ணீர் பந்தலில் இருந்த ஒரு சில்வர் குவளையை போலிசாரே எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

keeramangalam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதாவது புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர்பந்தல் திறந்தனர். அந்த தண்ணீர் பானையில் வைக்கப்பட்டிருந்த பல குவளைகள் காணாமல் போனது.கடைசியாக குவளை திருடனை கண்டுபிடிக்க அருகில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

3 ந் தேதி நள்ளிரவில் ரோந்துப் பணியில் இருந்த கீரமங்கலம் காவல் நிலையம் ஏட்டு அய்யப்பனும், ஊர்க்காவல்படையை சேர்ந்த வடிவழகனும் அந்த குவளையை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் விசாரணை செய்து ஏட்டு அய்யப்பனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊர்காவல் படை வடிவழகன் மீது விசாரணை நடந்து வருகிறது.போலிசாரே குவளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

police Keeramangalam Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe