புதுக்கோட்டையில் 82 பறவை இனங்கள் 

Pudukottai has 82 bird species

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜனவரி 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில், மாமன்னர் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் முனைவர் பழனிச்சாமி முன்னிலையில் வனத்துறையினர் மற்றும் மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 5 வனச்சரகங்களில் உள்ள குளம், ஏரி, கண்மாய் உட்பட 25 ஈர நிலப் பகுதிகளில், 120 பேர் 25 குழுக்களாகப் பிரிந்து 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகளைநடத்தினர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 82 பறவையினங்கள், 11,980 பறவைகள் கண்டறியப்பட்டன. இதில் கடந்த ஆண்டைவிட 3,196 பறவைகள் கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட பறவைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe