Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளார்கள் கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கு கால அவகாசம்... -மாவட்ட ஆட்சியர்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தாங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக்கடன் ரத்து செய்ய வேண்டும் சுயஉதவிக்குழு கடன்களுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்.. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளின் கடன்களுக்கு பயிர் சேதத்தின் அடிப்படையில் ஒருவருட காலம் அசல் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒருவருடம் முதல் நான்கு வருடம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


இச்சலுகையானது வருவாய்துறையின் அன்னவாரி சான்றிதழ் பயிர் சேதத்திற்கேற்ப வழங்கப்படும். மேலும், பயிர் சேதம் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும் மற்றும் 50 சதவீதத்திற்கு மேலும் இருக்க வேண்டும். 
இதர மத்திய கால விவசாய கடன்,  தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த கடன்,  சுய உதவிக்குழு கடன், வீட்டுக் கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன் ஆகியவற்றிற்கு ஒருவருட காலம் அசல் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பொதுத்துறை நிறுவன வங்கி, தனியார் வங்கி, இக்விடாஸ் வங்கி, பின்கர் வங்கி போன்ற வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பத்தை சமர்ப்பித்து இச்சலுகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி 09.03.2019 புயல் பாதிப்பிற்கு பிறகு வரக்கூடிய கடன் தவணைகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு குறித்து விவசாயிகள் கூறும் போது... மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு தற்காலிக நிவாரணமாக இருந்தாலும் அழிந்த விவசாயத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். அதுவரை அனைத்து வட்டிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு மொத்தமாக சுமையாக ஏறப் போகிறது. அதனால் விவசாய கடன், கல்விக் கடன், சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளால் நிம்மதியாக அடுத்தகட்டமாக விவசாயத்தை கவனிக்க முடியும் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி மோதி விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலையில், நேற்று (24-01-24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான  சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. காரிலிருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2024 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர் டவுன்ஹால், அசோக் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23) ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மழை வெள்ள பாதிப்பு; தமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Rain and flood damage The central committee praises the Tamil Nadu government

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வந்த மத்தியக் குழுவினர் டிசம்பர் 19 ஆம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆய்வு செய்திருந்தனர். மேலும் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாம் கட்டமாக மத்தியக் குழுவினர் 7 பேர் நேற்று (12.01.2024) ஆய்வு செய்தனர். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான இந்த குழுவில் ரங்கநாத் தங்கசாமி, பொன்னுசாமி, ராஜேஷ் திவாரி, விஜயகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் இரண்டாவது கட்டமாக இன்று (13.01.2024) ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவினரின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மத்தியக் குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்கள் மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்தியக் குழுவில் குழுவில் இடம் பெற்றுள்ள டெல்லி ஊரக வளர்ச்சி இயக்குநர் பாலாஜி, மாநில அரசின் பணி சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார்.