
புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் புதுக்கோட்டை நகரப் பகுதியில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
புதுக்கோட்டை ஸ்ரீ நகர்பகுதியில் நேற்று (15.11.2021) பெய்த கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. நேற்றுமூன்று மணி நேரமாக விடாமல் பெய்த கனமழையால் புதுக்கோட்டையில் மேட்டுப்பட்டி, ஸ்ரீ நகர், திருக்கட்டளை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை நகரத்தில் உள்ள 36 குளங்களில் 35 குளங்கள் நிரம்பிவிட்டன. இதன் காரணமாகக் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீநகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மக்கள் மழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)