Pudukottai fishermen in tears!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெறக் கோட்டைப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்களும், இரண்டு அதிகாரிகளும் சர்வதேச எல்லைக்குச் சென்று பெற்றுக்கொண்டனர். இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் மீனவர் ராஜ்கிரணின் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Pudukottai fishermen in tears!

Advertisment

இந்த சம்பவத்தில் ராஜ்கிரணுடன் படகிலிருந்த மீனவர்கள் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். அவர்களும் அனுப்பப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ராஜ்கிரணின் உடல்மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. மீனவரின் உடலைப் பார்த்து அப்பகுதி மக்கள் கண்ணீர்விட்டு அழுதனர். மீனவரின் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்தினார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என அப்பகுதிமீனவர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.