Advertisment

'மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை...' -நீதிமன்றத்தில் மனுதாரர் தகவல்!

 pudukottai fisherman issue upadate

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் அவரது உடலில் காயங்கள் இல்லை என உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisment

அதனைத்தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி மீனவர் ராஜ்கிரணின் உடல்தோண்டியெடுக்கப்பட்டு மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கப்பல் இடித்து மீனவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்கிரணின் உடல் முதல் உடற்கூறாய்வுக்கு பிறகு தைக்கப்படாமலும், உடை அணிவிக்கப்படாமலும்இருந்தது என்ற தகவலும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசை தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், அதற்கான நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

fisherman issue madurai high court Pudukottai srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe