Published on 25/08/2020 | Edited on 25/08/2020

கரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு ஆகஸ்ட் 20- ஆம் தேதி கரோனா உறுதியானது. இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறுமுகம் பின் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கடந்த நான்கு நாட்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.