Pudukottai District Alangudi Govt High sec School incident

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் புதுக்கோட்டைக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் புகார் கூறியுள்ளனர். அந்த புகாரில், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆண்டுகளாக வரலாற்றுத் துறை ஆசிரியராக பணியாற்றும் கீழகரும்பிரான்கோட்டை கிராமம் வாண்டையார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (வயது 40). இவர் பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும், பள்ளி மாணவர்களை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். ஆனால் பள்ளியில் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்கிறார்.

Advertisment

இவரால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வெளியே சொன்னால் இன்டர்னல் மார்க் போட மாட்டேன் என்று மிரட்டி வருகிறார்’ என்று கூறியுள்ளனர். மேலும், ‘இவரை எதிர்த்துப் பேசினாலோ, பாலியல் துன்புறுத்தலுக்கு இணங்க மறுத்தாலோ மாணவர்கள் மீது ஏதாவது குற்றம் சுமத்தி பள்ளிக்கே வரவிடாமல் செய்வார். சில மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர்’ என்றும் கூறியுள்ளனர்.

Advertisment

Pudukottai District Alangudi Govt High sec School incident

மாணவர்களின் புகார்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேருடன் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரனை செய்த போலிசார் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சக்திவேலைக் கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவர்களுக்கு மதிப்பெண்ணைக் காரணம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.