பெற்ற தாயைக் கொன்ற மகனுக்குத் தூக்கு!

pudukottai court verdict

புதுக்கோட்டையில் சொத்து தகராறில் பெற்ற தாயையே அரிவாளால் வெட்டிக்கொன்றமகனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் மறவபட்டிகிராமத்தில் தந்தையின் சொத்துக்காக நடந்த தகராறில் தாய் திலக ராணியைமகன் ஆனந்த் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தநிலையில் கொலையில் ஈடுபட்ட ஆனந்த் கைது செய்யப்பட்டு இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சொத்து தகராறில் பெற்ற தாயைக் கொன்ற மகன் ஆனந்துக்குத் தூக்குத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

incident mother Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe