ADVERTISEMENT

புதுக்கோட்டை கரோனா சித்த மருத்துவ மையத்தில் ஒரே நாளில் 54 பேர் அனுமதி!!

03:56 PM Aug 08, 2020 | kalaimohan

ADVERTISEMENT


கரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் நோய்க் கிருமியைத் தடுக்க கபசுரக்குடிநீர் போன்ற சித்தமருத்துவத்தில் உள்ள மூலிகை கசாயம் குடித்தால் தற்காத்துக் கொள்ளமுடியும் என்றும் மேலும் பாரம்பரிய உணவுகள், சிறுதானியங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும் சித்தமருத்துவர்கள் தொடக்கத்திலிருந்து கூறிவருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை, கோவை போன்ற பல இடங்களில் சித்தமருத்துப் பிரிவு சிறப்பாகச் செயல்படுவதால் உயிரிழப்புகள் குறைந்து சிகிச்சை முடிந்து குணமடைந்து உற்சாகமாக வீட்டிற்குச் செல்வதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் மாவட்டம் தோறும் சித்தமருத்துவ கரோனா சிகிச்சை மையங்களைத் திறக்கக் கோரிக்கைகள் எழுந்தது. அதன்படி சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவத் துறையின் கீழ் 100 படுக்கைகளுடன் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிட் 19 சித்த மருத்துவ மையத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் கோவிட் 19 சித்த மருத்துவ மையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒரே நாளில் 54 பேர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் உள் மருந்துகள் மற்றும் வெளி மருந்துகளான வேது பிடித்தல், சுய வர்மம், புள்ளிகள் இயக்குதல் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி அகியவைகளும் மருத்துவ அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூலிகை சூப்புகள், பாரம்பரிய அரிசி உணவுகள், தாணிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரான மருத்துவர் உம்மல் கதிஜா மற்றும் ‌புதுக்கோட்டை மாவட்ட கோவிட் 19 சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் மூத்த சித்த மருத்துவ அலுவலர்கள் மாமுண்டி, சுகுமார் ‌ஆகியோர் மேற்பார்வையிட்டனர். சிறப்பான சிகிச்சையில் அனைவரையும் குணமடைய செய்வோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT