Advertisment

விபத்தில் காயமடைந்தவருக்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி... அரசு மருத்துவமனையில் அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பெரியாளூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் கார்த்தீபன் (வயது 38). திங்கள் கிழமை மாலை கீரமங்கலம் சென்றவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன்பு எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட தனது மோட்டார் சைக்கிள் பிரேக்கை அழுத்திய போது நிலைதடுமாறி சாலையில் விழ தான் போட்டிருந்த ஹெல்மெட் உடைந்து தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவ்வளவு தரமற்ற ஹெல்மெட்டிலும் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளது தான் வேதனை.

Advertisment

அந்தப் பகுதியில் சென்றவர்கள் கார்த்தீபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உடைந்திருந்த தாடையில் தையல் போட வேண்டும் என்று சொன்னார்கள்.

pudukottai bike incident patient treatment cleaning work employees govt hospital

அதன் பிறகு நடந்தது தான் வேதனை அந்த வேதனையை அவரது சகோதரர் காந்தியே வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.தையல் போட மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் வருவார்கள் என்று பார்த்தால் வந்தது காக்கி சீருடை அணிந்த வந்தார் துப்புரவுத் தொழிலாளி.அவர் தான் கார்த்தீபனுக்கு தையல் போட்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினார் காந்தி.

Advertisment

இது குறித்து காந்தி நம்மிடம் கூறுகையில், தம்பி விபத்தில் சிக்கி காயமடைந்த தகவல் கிடைத்து அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் துப்புரவுப் பணியாளர் தையல் போடுகிறார். இதைப் பார்க்க வேதனையாக உள்ளது. நேர்த்தியாக தையல் போடவில்லை என்றால் பின்னால் பிரச்சனைகளும் வரலாம். அரசு மருத்துவமனை இப்படி உள்ளது.

pudukottai bike incident patient treatment cleaning work employees govt hospital

அதே போல ஹெல்மெட் ஐஎஸ்ஐ என்று சிம்பல் இருந்தாலும் அது போலியாக இருந்திருக்கிறது. இது போன்ற தரமற்ற ஹெல்மெட்களை எப்படி விற்க அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. அரசும் தனியாருமே பல உயிர்களோடு விளையாடுகிறார்கள் என்றார் வேதனையாக.மருத்துவமனை வட்டாரத்திலோ மருத்துவப்பணியாளர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையால் தான் இப்படி அனுபவமுள்ள துப்புரவுப் பணியாளர்கள் தையல் போட வேண்டியுள்ளது என்றனர். ஏழைகளின் உயிர்களோடு விளையாடும் இந்த அவலம் எப்போது மாறுமோ...

bike incident patient admit govt hospital PUDUKKOTTAI DISTRICT Tamilnadu treatment cleaning employee
இதையும் படியுங்கள்
Subscribe