அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பல இளைஞர்களுக்கு விலை உயர்ந்த செல்போன்களை வாங்கிக் கொடுத்து தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை வீடியோ, படங்கள் எடுத்து பல சமூக வலைதளங்களிலும் பரப்ப தனியாக ஒரு ஐ டி விங்க் ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் புதுகை புயல் சிவிபி பேரவை என்றும் பல பெயர்களில் அமைச்சர் பெயர்களில் முகநூல் பக்கங்களை தொடங்கி பதிவுகளும் படங்களும் பதிவிட்டு வருகின்றனர்.

pudukkottai state minister vijayabasker it wing facebook update

அதில் ஒரு முகநூல் பக்கம் புதகை புயல் வி பி பேரவை. அந்த பக்கத்தில்தான் ஒரு அதிமுக தொண்டரான வழக்கறிஞர் ராஜாளி சீ.ஜெயப்பிரகாஷ் என்பவர் தொடர்ந்து ஜெ மரணம் குறித்து ஆட்சியில் உள்ளவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்.

ஜெ. நினைவு தினத்தில் அவர் எழுதியுள்ள பதிவில்,

Advertisment

அம்மா மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்காதா? ஆட்சியை, கட்சியை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றி வருகிறார்கள் மாண்புமிகு ஓபிஎஸ்- ஈபிஎஸ். அதில் மாற்று கருத்து இல்லை. அம்மா மர்ம மரணம் பற்றி பதவி பொறுப்பில் இருப்பவர்கள் வாய் திறக்க பேச மறுப்பது ஏன்? அம்மா மர்ம மரணத்தில் சிபிஜ விசாரணைக்கு உத்திரவிடாதது ஏன்?

pudukkottai state minister vijayabasker it wing facebook update

2021 ஆட்சி அதிகாரமின்றி தொண்டர்களிடம் செல்லும்போது தொண்டர்களும், அம்மாவின் ஆத்மாவும், கடவுளும் உங்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். உண்மையை கூறுவதால் உள்ளக் குமுறலை கூறுவதால் என் மீது நடவடிக்கை எடுத்தாலும் அம்மாவிற்கு செய்யும் நன்றிக் கடனாக தொடர்ந்து குரல்கொடுப்பேன்.

Advertisment

வேதனையுடன் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ்.

pudukkottai state minister vijayabasker it wing facebook update

இதுதான் அந்த பதிவு. இந்தப் பதிவை படிப்பவர்களுக்கு குழப்பமாகவும் உள்ளது அமைச்சர் பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் எப்படி இப்படி எல்லாம் தொடர்ந்து எழுத அனுமதிக்கிறார்கள் என்பதே அந்தக் குழப்பம். விரைவில் அவர் மீது நடவடிக்கை கூட பாயலாம் என்கிறார்கள் அதிமுகவினர்.