Skip to main content

கபசுரக் குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்!!!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

டெங்கு காய்ச்சல் வந்தபோது அதிலிருந்து மக்கள் தங்களை முன் எச்சரிக்கையாக நிலவேம்பு குடிநீர் குடித்தால் கிருமி தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று சித்த மருத்துவம் சொன்னதால் ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனைகள் தொடங்கி, பொதுஇடங்கள் என நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அதனால் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மேல் அதீத நம்பிக்கை பிறந்தது. இப்போது வரை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

 

Pudukkottai



ஆனால் தற்போது பரவும் கிருமி, மக்கள் நடமாட்டம் அதிகமானால் அதிகமாக பரவும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில்தான் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், வாதசுரக்குடிநீர் குடித்தால் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.  அதனால் இந்த குடிநீருக்காக மக்கள் அலையத் தொடங்கி உள்ளனர்.

 

Pudukkottai


 

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மருத்துவமனைகளில் மட்டும் கொஞ்சம் இருப்பு உள்ள நிலையில் மற்ற மருத்துவமனைகளில் இருப்பு இல்லை என்று பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
 

புதுக்கோட்டை சித்தமருத்துவப் பிரிவில் கடந்த சில நாட்களாக கபசுரக் குடிநீருக்காக பொடிகள் வழங்கப்படுவதை அறிந்து அங்கு நகர மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இது மாவட்டத்தின் மற்ற பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்தால் மக்கள் அச்சமின்றி  இருப்பார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 10th, 11th, 12th General Examination Time Table Publication

 

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''10, 11, 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் ஏற்கனவே படித்து நன்றாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். தமிழ்நாட்டு முதல்வர் சொல்வது போல இந்த வயது என்பது 'படிப்பு... படிப்பு... படிப்பு...' என அதில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய வயது. வேற எந்த ஒரு விஷயத்திற்கும் நமது நாட்டம் சென்றுவிடாமல் நீங்கள் கவனமாக நல்ல முறையில் படித்து நல்ல விதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாக வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்றார்.

 

தொடர்ந்து வெளியான பொதுத்தேர்வு கால அட்டவணையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 26/3/2024 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறும். 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 19/2/2024 தொடங்குகிறது.11 ஆம் வகுப்பு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.23 ஆம்  தேதி தொடங்கி பிப்.29 தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

தமிழ் -    26/03/2024

 

ஆங்கிலம் -    28/03/2024

 

கணிதம் -    01/04/2024

 

அறிவியல் -   04/04/2023

 

சமூக அறிவியல் -   08/04/2024

--------------------------------------------------------------------------

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

 

மொழிப்பாடம்-     04/03/2024
 
ஆங்கிலம்-       07/03/2024

இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்- 12/03/2024

கணினி அறிவியல்/ புள்ளியியல் - 14/03/2024
 
உயிரியல் /வணிக கணிதம் / வரலாறு - 18/03/2024

வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்- 21/03/2024

--------------------------------------------------------------------------

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  அட்டவணை

 

மொழிப்பாடம் -     01/03/2024

 

ஆங்கிலம் -       05/03/2024

 

கணினி அறிவியல்/ உயிரி அறிவியல்/ புள்ளியியல்-    08/03/2024

 

வேதியியல்/ கணக்குப்பதிவியல்/ புவியியல்-  11/03/2024

 

இயற்பியல்/பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்-  15/03/2024

 

கணிதம்/ விலங்கியல்/நுண் உயிரியல்-  19/03/2024

 

 

Next Story

திண்டிவனம் அருகே ராஜநாகம்; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Rajanagam is near Tindivanam and the public is in fear

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு வடகிழக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆவணிப்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்குச் சொந்தமான காலி மனை புதர் மண்டிக் கிடந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 12 அடி நீளம் உள்ள மிகப்பெரிய ராஜநாகம் இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். பார்த்ததோடு அதை தங்கள் செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்த தகவலை திண்டிவனம் தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தெரிவித்தனர். அவர்கள்  பொக்லைன் இயந்திரம் கொண்டு அப்பகுதியை சுத்தம் செய்து பார்த்தனர். பல மணி நேரம் தேடியும் ராஜநாகம் கிடைக்கவில்லை. 

 

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் கூறும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தான் இதுபோன்ற ராஜநாகம் வசிக்கும். கிராமங்கள் நிறைந்த இப்பகுதியில் ராஜநாகம் இருப்பது வியப்பாக இருக்கிறது. அது இங்கே எப்படி வந்திருக்கும்; இப்பகுதியில் இருந்து யாராவது நான்கு சக்கர வாகனங்களில் மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருப்பார்கள். அப்படி சென்றவர்கள் அங்கே பல மணி நேரம் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். ராஜநாகக் குட்டிகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அந்தப் பகுதி இருந்திருக்கும். அதன் காரணமாக அந்த வாகனங்களின் சந்து பொந்துகளில் ஏறி ராஜநாகக் குட்டி தங்கி இருக்கும். அதன் மூலம் இப்பகுதிக்கு வந்திருக்கும். அது இங்கே வளர்ந்து 12 அடி நீளம் உள்ள ராஜநாகமாக வளர்ந்துள்ளது எனத் தெரிய வருகிறது 

 

இதனால் கிராம பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இருந்தும் இந்த ராஜநாகத்தின் நடமாட்டம் தெரிந்த உடனே எங்களுக்குத் தகவல் அளித்தால் உடனே விரைந்து வந்து அதைப் பிடித்து வனத்துறையில் விடுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர். திண்டிவனம் பகுதியில் ராஜநாக நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.