கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களைத்தற்காத்துக் கொள்ள இந்தியா முழுவதும் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம். 21 நாட்களுக்கு வீட்டிலேயே இருங்கள். அப்போது தான் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/d3_5.jpg)
இந்த ஊரடங்கு உத்தரவால் ஒட்டுமொத்தமாக விவசாயமும் பாதிக்கப்பட்டு காய்கனிகள், மலர்கள் அத்தனையும் குப்பைக்குச் செல்கிறது. இதனால்செலவுக்கே வழியின்றி விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போல கடைகள் அடைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களின் உணவு கேள்விக்குறியானது. தெருக்களின் சுற்றிய கால்நடைகள், நாய்களுக்கும் உணவின்றி தவிக்கத் தொடங்கியது. பல இடங்களில் தன்னார்வமுள்ள சமூக ஆர்வலர்கள் உணவுகள் வழங்கி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/d2_11.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மனநிலைபாதிக்கப்ட்டு தெரு ஓரங்களில் சுற்றித் திரிபவர்கள். ஆதரவின்றி பேருந்து நிலையத்தில் படுத்திருந்தவர்களுக்கு கீரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கடந்த சில நாட்களாக உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்.மேலும் கீரமங்கலம் பகுதியில் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்குத் தண்ணீர், தெரு நாய்களுக்குப் பால், பிஸ்கட் வழங்கி பசியை போக்கி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/d4_0.jpg)
மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினிகளும் தெளித்து வருவதுடன் முகக் கவசங்களும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மனிதாபிமானத்தோடு செய்யப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்களின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)