Advertisment

புதுக்கோட்டையில் விமானம் விபத்துக்குள்ளானதாக வதந்தி! இருவர் மீது வழக்குப்பதிவு!!!

Pudukkottai - Plane Crash - Rumor issue

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பேயாடிக்கோட்டை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து அதிகமான சத்தத்துடன் விமானம் விழுந்து தீப்பற்றி எரிவதாக வதந்திகள் பரவியது. பின்னர் எரிந்தது விமானம் இல்லை, கருவேல மரங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, "புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த இடத்திலும் விமான விபத்து நடக்கவில்லை. வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பொய்யான செய்தி பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருபுவனவாசல் காவல்நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

fight pudukkottai rumors
இதையும் படியுங்கள்
Subscribe