Advertisment

ரூ. 22 லட்சத்தில் அமைக்கப்பட்ட வைஃபை சேவை... ஒரே மாதத்தில் மூடுவிழா!

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி அருகில் ரூபாய் 70 லட்சம் செலவில் நவீன சத்யமூர்த்தி பூங்கா அமைக்கப்பட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

Advertisment

இந்த பூங்காவில் செயற்கை நீரூற்று குழந்தைகள் விளையாடும் சின்தடிக் ரப்பர் தளம் மற்றும் பல்வேறு அதிநவீன விளையாட்டு உபகரணங்கள் என பலவிதமான பொழுதுபோக்கு கருவிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. அதனால் மாலை நேரங்களிலும் விடுமறை நாட்களிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் ஏராளமானோர் வந்தனர்.

pudukkottai park wifi facilities problem peoples shock

பூங்காவில் நவீன விளையாட்டு உபகரணங்களுடன் ரூ. 22 லட்சம் செலவில் அதிநவீன வைஃபை டவர் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு இந்த இலவச வைஃபை சேவையை பயன்படுத்தி வந்தனர். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகள் இளைஞர்கள் ஏராளமானோர் இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர்.

Advertisment

pudukkottai park wifi facilities problem peoples shock

இப்படி சேவை செய்து வந்த அதி நவீன வைஃபை கடந்த ஒரு மாதமாக நிறுத்திக் கொண்டுள்ளது. மத்திய அரசு நிதியில் அமைக்கப்பட்ட இந்த திட்டமானது துவக்கும் போது கவர்ச்சிகரமாக இருந்தாலும் மழையில் நனைந்த மேக்கப் அழகி போல் தனது வேஷத்தைக் கலைத்துக் கொண்டுவிட்டது.

தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பயனற்று நிற்கும் வைஃபை மயிலைப் பார்த்து.. ரூபாய் 22 லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த வைஃபை டவர் விரயச் செலவு என பொதுமக்கள் கருதுகின்றனர். நகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் சத்தியமூர்த்தி நகராட்சி பூங்காவை பராமரித்துவைஃபை டவரை செயல்பட வைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

government park peoples pudukkottai wifi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe