தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவின் போது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய சுயேச்சை வேட்பாளர் சேகருக்கு ஸ்பேனர் சின்னம் ஒதுக்கிய நிலையில் வாக்குச்சீட்டில் ஸ்குரூ சின்னம் இருந்தது.

Advertisment

Pudukkottai-LocalBodyElections

இவ்வாறு சுயேச்சை வேட்பாளரின் சின்னம் மாற்றி அச்சடிக்கப்பட்டிருந்ததால், விராலிமலை ஒன்றியம் 15வது வார்டுக்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் உள்ள 13 சாவடிகளில் மட்டும் கவுன்சிலர் தேர்தலுக்கு நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.