Advertisment

இளம்பெண்ணை கடத்தி 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்...!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 20 வயது இளம் பெண் வீடு திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் ஊரெங்கும் தேடியும் காணவில்லை. நேற்று மாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உறவினர்கள் புறப்பட்ட போது, அந்த வழியாகச் சென்ற சுரேஷ் என்பவர் காணாமல் போன அந்தப் பெண் தனது வீட்டில் இருப்பதாக சொல்லிவிட்டு தலைமறைவானார்.

Advertisment

Pudukkottai incient

ஒதுக்குப்புறமாக இருந்த சுரேஷ் வீடு அடைக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் இளம் பெண் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து பதறிய உறவினர்கள், அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மயக்கம் தெளிந்து அந்த பெண், தன்னை சுரேஷ் இரண்டு நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இளம் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

தலைமறைவான சுரேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் முதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டாவது முறையாக சுரேஷை திருமணம் செய்து கொண்ட பெண் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தான் உள்ளூர் பெண்ணை அடைத்து வைத்து சுரேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தப்பி ஓடிய சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பிரச்சனையால் அந்த கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

police pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe