Advertisment

தகாத உறவு... விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

தங்கும் விடுதியில் தகாத உறவில் ஈடுபட்டிருந்தவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சத்யா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த பெண்ணிற்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த திணையாய்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.

Advertisment

PUDUKKOTTAI ILEGAL CONNECTION RAMESHWARAM COUPLE INCIDENT

நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால், விடுதி உரிமையாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து விடுதி உரிமையாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை மீட்டு உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Rameshwaram incident CONNECTION ILEGAL PUDUKKOTTAI DISTRICT Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe