Advertisment

மின்னல் தாக்கி விவசாய தொழிலாளர்கள் 4 பேர் பலி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (15/10/2019) காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டத்து. பல இடங்களில் மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கடலை தோட்டத்தில் 20- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

Advertisment

pudukkottai heavy rain incident peoples admit hospital

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் கலைச்செல்வி, லட்சுமி,சாந்தி, விஜயாஉள்பட 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Advertisment
incident peoples heavy rain PUDUKKOTTAI DISTRICT Tamilnadu
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe