Advertisment

Pudukkottai-Flight crash-Rumor

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பேயாடிக்கோட்டை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து அதிகமான சத்தத்துடன் விமானம் விழுந்து தீப்பற்றி எரிவதாக வதந்திகள் பரவியது.

Advertisment

இதற்கிடையில் நாம் கிராமத்தினரிடம் விசாரணை செய்த போது விமானம் விழவில்லை கருவேல மரங்கள் எரிகிறது என்பதை கிராமத்தினரே உறுதி செய்தனர். அதனைப் படங்களுடன் 'நக்கீரன்' இணையத்தில் செய்தி வெளியிட்டோம்.

Pudukkottai-Flight crash-Rumor

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள ஆடியோவில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த இடத்திலும் விமான விபத்து நடக்கவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.