Advertisment

உடலை ஒப்படைக்கும் வரை போராட்டம்... புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை!

Pudukkottai fishermen Meeting

கடந்த 19 ஆம் தேதி புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இந்த சம்பவத்தில் மீனவர்கள்சுகந்திரன், சேவியர் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய ராஜ்கிரண் என்ற மீனவரைக் காணவில்லை. பலமணிநேர தேடலுக்குப் பின் மீனவர் ராஜ்கிரணின் உடல் நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. மீனவர்கள்சுகந்திரன், சேவியர் ஆகியோருடன் கைப்பற்றப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியது.

Advertisment

இதனையடுத்துமீனவர்கள் உண்ணாவிரதம், சாலைமறியல்போராட்டத்தைக்கையிலெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகப் புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். கோட்டைபட்டினத்தில்உள்ள மீனவர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்களும்கலந்துகொண்டுள்ளனர். மீனவர் ராஜ்கிரண் உடலை ஒப்படைக்கும் வரை மீனவர்களின்இந்த போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

srilanka meetings Fishermen Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe