புதுக்கோட்டை அடப்பன் வயல் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினத்தின் மகன் வினோத் சக்கரவர்த்தி (வயது 35). இவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்த்தின் அக்கா மகன் ஆவர். இன்று மாலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் வினோத் சக்கரவர்த்தி தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகள் உள்ளூரை சேர்ந்த நபர்களா? அல்லது வெளியூரை சேர்ந்த நபர்களா? முன் விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.