Advertisment

ஸ்டாலின் அரியணை ஏறுவார்!- பாஜக நிர்வாகி பேச்சு!!

திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார் என பாஜக நிர்வாகி பி.டி.அரசகுமார் பேச்சு.

Advertisment

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிலையில் திருமண விழாவில் பங்கேற்று பேசிய பாஜக கட்சியின் தமிழக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், காலம் கணியும்; காரியங்கள் தானாக நடக்கும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்; நாம் அதை பார்க்க போகிறோம். எம்ஜிஆருக்கு பின் நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின் தான். உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்த ஸ்டாலின் என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பார். ஸ்டாலின் முதல்வராக நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்சனையின் போதே செய்திருப்பார். ஜனநாயக முறையில் முதல்வராக விரும்புபவர் ஸ்டாலின் என பி.டி.அரசகுமார் புகழாரம்.

Advertisment

PUDUKKOTTAI DISTRICT MARRIAGE FUNCTION BJP LEADER ARASAKUMAR SPEECH

மேலும் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் பேசும் போது, "ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கனவு விழித்து கொண்டு இருப்பவர்களின் கனவு; அது நிச்சயம் நிறைவேறும். ஸ்டாலின் முதல்வராவார் என கனவு காணாதீர்கள் என சொல்பவர்களை கனவிலும் கண்டுகொள்ளாதீர்கள்" என்றார்.

BJP LEADER ARASAKUMAR SPEECH FUNCTION DMK MK STALIN DMK MLA FAMILY MARRIAGE PUDUKKOTTAI DISTRICT Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe