Advertisment

20 நாளைக்கு ஒரு முறை குடிதண்ணீர் வருது... அமைச்சர், ஆட்சியர் மத்தியில் மாணவி பேச்சு!

20 நாளைக்கு ஒரு முறை குடிதண்ணீர் வருது. அந்த நாளைகொண்டாடுறோம். எப்ப தான் தினமும் குடிதண்ணீர் வரும். அமைச்சர்,ஆட்சியரை நெளிய வைத்த மாணவியின் பேச்சு!

Advertisment

உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸ்பற்றிய விழிப்புணர்பை மாணவர்கள், பொதுமக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் கல்லூரிகளில்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (06/02/2020) புதுக்கோட்டை அரசு மகளில் கலைக் கல்லூரியில்விழிப்பணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நடந்தது. இந்தநிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார்.

pudukkottai district government function college student speech

அப்போது அவர் பேசும் போது, கொரோனா வைரஸ் பரவும் விதம்மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து பேசியவர் இதைஅனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்துபுதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயனடையும் விதமாக ரூ.7 ஆயிரம்கோடியில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படஉள்ளது. அதே போல மகளிர் கல்லூரிக்கு எதிரில் ரூ.10 கோடிமதிப்பீட்டில் பூங்காவும் அமைய உள்ளது என்று பேசிய அமைச்சர்தொடர்ந்து மாணவிகளிடம் இது பற்றி கேள்விகள் எழுப்பி பதில் கேட்டார்.

Advertisment

காவிரி வைகை குண்டாறு தண்ணீர் எப்படி வரும் என்று அமைச்சர்கேட்க வாய்க்கால் வெட்டி கொண்டு வரனும் என்றார் ஒரு மாணவி்.அந்த நேரத்தில் எழுந்த ஒரு மாணவி.. என் பெயர் ஹரிணி நான்வம்பன் காலனியில் இருந்து கல்லூரிக்கு படிக்க வருகிறேன் என்றுதொடங்கியவர்.. காவிரி தண்ணீரை புதுக்கோட்டைக்கு கொண்டு வருவதுவரவேற்கத்தக்கது. ஆனால் எங்க ஊருக்கு 20 நாளைக்கு ஒரு முறை தான் குடிக்க தண்ணீர் வருது. அந்த தண்ணீர் வரும் நாளை எதிர்பார்த்துகாத்திருப்போம்.

ஆனா குடிதண்ணீர் எப்ப வரும், எப்ப வரும்னுதெரியாது. அந்த தண்ணீர் வரும் நாளை மக்கள் மகிழ்ச்சியோடகொண்டாடுவாங்க. அந்த மகிழ்ச்சி அடுத்த நாள் நீடிக்காது. குடிதண்ணீர்கிடைப்பது அரிதாக உள்ளது. தொடர்ந்து தினமும் தட்டுப்பாடு இன்றிகுடிதண்ணீர் கிடைத்தால் எங்கள் மக்கள் தினமும் மகிழச்சியாகஇருப்பார்கள். இதற்கு அமைச்சரும், ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று படபட வென்று பேசிவிட்டு இறங்கினார். இதைக் கேட்டஅமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டவர்களை நெளியத் வைத்துவிட்டது இந்தபேச்சு.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்கு வந்துட்டு காவிரி, பூங்காஎன்று பேசி மாணவிகளை திசைமாற்றிய அமைச்சரின் பேச்சால் மாணவி தனது கிராமத்தின் அவலநிலையை அள்ளிக் கொட்டிவிட்டுபோய்விட்டார் என்கின்றனர் சக மாணவிகள்.

college function government pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe