"நடுக்கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரம்"- அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

pudukkottai district fisherman incident minister pressmeet

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் புதுக்குடி மீன்பிடி தளத்தில் இருந்து அதே ஊரைச் சேர்ந்த மீனவர் தினமணி தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரது மகன் வசீகரன் மற்றும் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் நேற்று (26/06/2021) மீன்பிடிக்கச் சென்ற போது பலமான அலையால் வசீகரன் நடுக்கடலில் தவறி விழுந்துவிட்டார்.

சக மீனவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீனவ இளைஞரை மீட்க கோரி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். மீனவர்களும் கடலோர காவல் படையினரும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மீனவர் வசீகரன் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். அப்போது வசீகரன் உறவினர்கள் கதறி அழுது மீட்க கோரினார்கள்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மீனவர் வசீகரனை மீட்பதற்காக கடலோரப்படை படகுகள் அனுப்பி வைத்து தேடப்பட்டு வருகிறது. அவர்கள் பதிலை எதிர்பார்த்து அதன் பிறகு தேவைப்பட்டால் ஹெலிக்காப்டர் அனுப்பி தேடவும் தமிழக அரசு தயாராக உள்ளது. மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

fisherman incident minister pressmeet
இதையும் படியுங்கள்
Subscribe