Advertisment

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்!

PUDUKKOTTAI DISTRICT CHILDREN INCIDENT POLICE INVESTIGATION

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் என்ற இடத்தில் 'CISF' வீரர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வீரர்கள் இன்று (30/12/2021) துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற கலைச்செல்வன் என்ற புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன், வீட்டுக்குள் உணவருந்திக் கொண்டிருந்த போது, அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

Advertisment

இதில், படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவனின் மூளைக்கு அருகில் குண்டு பாய்ந்திருப்பதால், அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு பொது மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கீரனூர் டி.எஸ்.பி. தலைமையில விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

children incident pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe