புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் வழியாக மணப்பாறை சென்ற தனியார் பேருந்து அன்னவாசல் அருகே அதிவேகமாகச் சென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 32 பேர் படுகாயமும் 4 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் மிக மோசமாக காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.
விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உறவினர்கள் அதிகமாக கூடியுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் பலர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்ததுடன் இவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.