Advertisment

பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

pudukkottai children incident mahila court judgement for today

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், கடையூரைப் பகுதியைச் சேர்ந்த 11- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கு, கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளார்.மேலும், கொலை செய்துவிடுவதாக மிரட்டி சிறுமியைக் கருக்கலைப்பு செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ராஜ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு இன்று (22/11/2021) புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத்தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காகவும், குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்த குற்றத்திற்காகவும் மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Court order PUDUKKOTTAI DISTRICT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe