pudukkottai children incident chief minister mkstalin announced the funds

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமார் குடும்பத்துக்கு ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பாப்பன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாடிமுத்து, திருமதி.போதினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று லட்சம், உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.