தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 3-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற நவ.24 முதல் டிச.3-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர் மன்ற வளாகததில் நடைபெறவுள்ளது.

Advertisment

 At Pudukkottai, 2.5 lakh students read the book at the same time !!

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடம் புத்தகத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 3- ஆம் பாட வேளையில் பள்ளி நூலகங்களில் இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு நிர்வாகிகளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று இதற்கான அழைப்பிதழைக் கொடுத்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 1500 - க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செவ்வாய்க் கிழமை இந்தப் புத்தக வாசிப்பு இயக்கம் மிகப்பிரமாண்ட அளவில் நடைபெற்றது. புத்தக வாசிப்பில் சுமார் 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளதாக கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 At Pudukkottai, 2.5 lakh students read the book at the same time !!

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ்தொடங்கி வைத்தார்.

Advertisment

அவர் பேசும்போது, உலக அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தக வாசிப்பு அவசியம். நான் போட்டித் தேர்வில் வெற்றிபெற்று இன்று ஆட்சியராக இருப்பதற்கு இதுபோன்ற புத்தகங்களே காரணம். சிறுவயது முதல் புத்தக வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்கையில் பெரிய அளவில் சாதிக்கலாம். நீங்களும் புத்தகங்களை வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவிற்கு பெற்றோருடன் வந்து பெருமளவில் புத்தகங்களை வாங்கிப் பயனடைய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில்வரவேற்புக்குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி, செயலாளர் அ.மணவாளன், பொருளாளர் எம்.வீரமுத்து, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், கவிஞர் நா.முத்துநிலவன், எல்.பிரபாகரன், பேரா.கருப்பையா, முத்துச்சாமி, சு.பீர்முகமது, பவுனம்மாள், உஷாநந்தினி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.