Skip to main content

புதுக்கோட்டையில் 2 லட்சம் மரங்கள் நாசம் - விவசாயிகள் சோகம்

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

 

kee


   கஜா புயல் பாதிப்பால் கீரமங்கலம் வடகாடு மற்றும் சுற்றியுள்ள   50 கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் மரங்கள் ஒடிந்து நாசமானது. குளமங்கலத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.

 

k


 கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடகாடு, மாங்காடு, அணவயல், செரியலூர் கறம்பக்காடு, நகரம் சேந்தன்குடி கொத்தமங்கலம் புள்ளாண்விடுதி, மேற்பனைக்காடு நெய்வத்தளி பனங்குளம் குளமங்கலம், பெரியாளூர் பாண்டிக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காற்றின் வேகம் அதிகானதால் மா, பலா, தென்னை, தேக்கு போன்ற சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் மரங்களுக்கு மேல் ஒடிந்து நாசமானது. அதே போல இப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் வாழைகளும் அடியோடு சாய்ந்து நாசமனது.
இருவர் பலி.

 

k


   குளமங்கலம் கோயிலில் தங்கியிருந்த சன்னாசி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியும் புயலுக்கு பலியாகி உள்ளனர்.  மேலும் செரியலூர் ரவி என்பவரின் 3 ஆடுகள் உள்பட இப்பகுதியில் சுமார் 50 க்கும் றே்பட்ட ஆடு, மாடுகள் பலியாகி உள்ளது.


 புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் மின் மான்றிகள் மின்கம்பங்கள் உடைந்து நாசமானதால் அனைத்து கிராமங்களும் மின்சாரமின்றி இருளில் மூழ்கி உள்ளது. மேலும் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதி்பட்டு வருகின்றனர். 2 நாட்கள் கடந்தும் நிவாரணக்குழுக்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்களே சாலையில் கிடந்த மரங்களை அகற்றி குடிதண்ணீருக்காக சொந்த செலவில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தி உள்ளனர்.

 

k


   கீரமங்கலம் வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு எந்த அதிகாரியும் பார்வையிடவோ உணவு தண்ணீர் கொடுக்கவோ வராததால் வடகாடு மாங்காடு அணவயல் கைகாட்டி கீரமங்கலம் பனங்குளம் மற்றும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

k1

 

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூறும் போது.. சுமார் 2 லடசம் மரங்கள் வரை சாய்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் விவசாயிகளை வாழ தை்துக் கொண்டிருந்த சுமார் 75 ஆயிரம் பலா மரங்கள் மட்டும் ஒடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆனால் எங்கள் வேதனையை புரிந்துகொள்ள எந்த அதிகாரியும் வரவில்லை என்றனர்.

 

சார்ந்த செய்திகள்