cudalore

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பவளநகரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(54). உதவி சப்-இன்ஸ்பெக்டரான இவர் புதுச்சேரி ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றார். அப்போது செம்மண்டலம் அருகே சென்ற போது, வாகனம் ஒன்று மோதியதில் கிருஷ்ணராஜீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது கிருஷ்ணராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment