மார்ச் 8 சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு சமூக ஆர்வலர்களின் சேவையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சமூக சேவையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து அர்ப்பணிப்ப்போடு வாழ்ந்து வரும் அவர்களின் துணைவியாருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.

Advertisment

women's day

புதுச்சேரி மகப்பேறு செவிலியர் சங்கம் மற்றும் புதுவை அன்னை தெரசா சமூக சேவை மையம் சார்பாக புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் முத்து, மகப்பேறு செவிலியர் சங்க தேசிய செயலாளர் பிரமிளா தமிழ்வாணன் ஆகியோர் 10 பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.

Advertisment

எந்த நேரத்திலும் மக்களுக்காக, மண்ணுக்காக பணி செய்யும் சமூக ஆர்வலர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன், அவர்களின் சமூகப்பணிகளுக்கு ஆதரவாக இயங்கும் மனைவிமார்களை பாராட்டிய இந்நிகழ்வு வித்தியாசமாகவும், வரவேற்கும் விதமாகவும் இருந்தது.