Skip to main content

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

,



புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அணியில் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்திருந்தன. இந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்று பாஜக மேலிடத் தலைவர் இன்று அறிவித்தார்.

 

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், அதிமுக, பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவதால் பாமகவுக்கு இந்தமுறை வாய்ப்பில்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த பாமக, புதுவை மற்றும் காரைக்காலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்