புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில்,வில்லியனூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவி துண்டு அணிவித்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்துசம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர்மற்றும்எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் போராட்டத்தில்ஈடுபட்டனர்.காவலர்களும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து,காவி துண்டுஅவிழ்க்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.