ADVERTISEMENT

புதுவையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘சென்டாக்’ கலந்தாய்வு நடத்த இடைக்காலத்தடை!

08:09 AM Dec 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘சென்டாக்’ கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

புதுவையில் உள்ள, வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர், பிம்ஸ் ஆகிய முன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக புதுவை மாநில மாணவர்களுக்கு 27 சதவீதம் மட்டுமே ஒதுக்குவதாகவும், 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்றும், புதுவை சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கத்தின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, புதுவை மாநில சார்பில் மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசினுடைய ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும்வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக்கூடாது என்றும், இறுதி தீர்ப்பு டிசம்பர் 9- ஆம் தேதி வழங்கப்படும் என்றும், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT