புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை பற்றி பேசுகையில்,
புதுச்சேரி மாநிலத்தின்சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாலம். ஆனால் தமிழகத்தில் சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
இந்த நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக்கொண்டால் ஒரே மாதிரியான வழக்கில் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வந்துள்ளது. சமூக வலைதளத்தில் இந்த முரண் பற்றி அதிக விமர்சனங்கள் வருகின்றன எனக் கூறினார்.