Advertisment

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பேருந்துகள் இயக்கம்! கடலூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி!

Puducherry - Karaikal Bus Operated

சீனாவில் உருவானதாக கூறப்படும் கரோனா வைரஸ், படிப்படியாக உலகம் முழுவதும் பரவி மனித சமூகத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த அரசு இயந்திரமும், மனித இயல்பு வாழ்க்கையும், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக திரும்பி வருகிறது. இதன்காரணமாக வெறிச்சோடிக் கிடந்த சாலைகளில் வாகனப் போக்குவரத்து துவங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர், நாகை வழியாக காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளை பேருந்துகள் கடந்து செல்ல இருப்பதால் கடலூர், நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது. அவர்கள் நிபந்தனைகளுடன் இயக்க ஒப்புதல் அளித்ததால் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment
bus Karaikal Puducherry lockdown corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe