புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் புருஷோத்தமன், இவர் தற்போது புதுவை மாநில அதிமுக செயலாளராக உள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk in_2.jpg)
இவர் இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை செங்குளவி கொட்டி உள்ளது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். அவர் குளவி கொட்டியதால் இறந்தாரா? இல்லை மாரடைப்பால் இறந்தாரா? என்று தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow Us