Advertisment

"என்னை யாராலும் தடுக்க முடியாது" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 

puducherry governor tamilisai talks about mla nehru questions 

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றிய போது புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் இரவல் ஆளுநரை நியமிக்க வேண்டாம் என பதாகையை ஏந்தி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு வெளிநடப்பு செய்தார்.

Advertisment

இந்நிலையில், தெலுங்கானாமாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலைஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைசந்தித்து பேசும் போது, " என்னை இரவல் ஆளுநர்என்று விமர்சித்தவர்களுக்கு முழுநேரம்பட்ஜெட்டை தாக்கல் செய்து காட்டியது நான் அவர்களுக்கு அளிக்கும் பதிலாகும்.

Advertisment

சமூக வலைத்தளங்களில் ஏன் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள்என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மகளிர் தின விழாவில் பங்கேற்கஒரு சகோதரியாக தமிழகத்துக்கு வருகிறேன். அதை யாராலும் தடுக்க முடியாது. எனக்கு சமூக வலைத்தளங்கள் மூலம்எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்தமிழகத்திற்குள்தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன்" என்று பேசினார்.

Tamilnadu budget trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe