புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பெரியசாமி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
புதுவை மாநில அதிமுக துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது நெசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஏழுமலை என்பவரது வீடு தீ பிடித்ததை அறிந்து நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட நபருக்கு கையில் 2000 ரூபாய் பணம் கொடுத்து, தேவையான உதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உத்தரவாதமும் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் விதியை மீறி வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக அத்தொகுதியின் உதவி தேர்தல் அலுவலர், நெசப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், பெரியசாமி லஞ்சம் கொடுக்கும் எண்ணத்தோடு பணத்தை வழங்கவில்லை எனவும், ஒரு அவசரகால உதவி என்று நினைத்தே பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.